Saturday, January 28, 2006

பல்லவியும் சரணமும் II - பதிவு 4

சில பழைய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில், !!! தேவையிருந்தால் மட்டுமே!

ஓருவர் பின்னூட்டமிடும்போது, 3 அல்லது 4 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-))

ஏனெனில், மற்றவர்களும் சற்று முயன்று பார்க்கட்டுமே!

3 பின்னூட்டங்களுக்குப் பிறகு, there are no regulations, it becomes a FREE FOR ALL!


1. கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் ...

2 முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி....

3. விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா ...

4. பண்பாடு இல்லாமல் பெண்பாடு பெரும்பாடு இப்போது ...

5. குங்குமம் வைத்தவன் சங்கமம் ஆவது இருவரின் நெஞ்சினிலே ...

6. எனது தெய்வம் வேறெங்கும் இல்லை ...

7. திருமணத்துக்கு முன் மனதை மூடும் .... மோகம் ...

8. இருப்பது சில நாள் அனுபவிப்போமே எது தான் குறைந்து விடும்...

9. அன்னையைப் பார்த்த பின் என்ன வேண்டும் ...

10. நூறு சொந்தம் வந்த பின்னும் தேடுகின்ற அமைதி எங்கே ...

11. முள் நடுவே மலர் வளர்த்து முடியும் வரை காத்திருந்தேன்...

12. என் தணலும் நீர் போல் குளிரும் ...


என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!


என்றென்றும் அன்புடன்
பாலா

15 மறுமொழிகள்:

கைப்புள்ள said...

2. அதிசய ராகம் ஆனந்த ராகம் அழகிய ராகம் அபூர்வ ராகம்....அபூர்வ ராகங்கள்

said...

2. அதிசய ராகம் - அபூர்வ ராகங்கள்
4. மான் கண்ட சொர்க்கங்கள் - 47 நாட்கள்
5. புன்னகை மன்னன் - இரு கோடுகள்
12. உள்ளம் என்பது ஊமை - பார்த்தால் பசி தீரும்

said...

2. அதிசய ராகம் - அபூர்வ ராகங்கள்
4. மான் கண்ட சொர்க்கங்கள் - 47 நாட்கள்
5. புன்னகை மன்னன் - இரு கோடுகள்
12. உள்ளம் என்பது ஊமை - பார்த்தால் பசி தீரும்

கைப்புள்ள said...

5. புன்னகை மன்னன் பூவிழி கண்ணன் ருக்மிணிக்காக அந்த பாமா ருக்மிணி இருவருமே அவன் ஒருவனுக்காக...இரு கோடுகள்

பினாத்தல் சுரேஷ் said...

1. கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் - எந்த ஊர் என்றவனே..

2 முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொலி.... -- அதிசய ராகம், ஆனந்த ராகம்

3. விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா ... இதய வீணை தூங்கும்போது பாட முடியுமா?

5. குங்குமம் வைத்தவன் சங்கமம் ஆவது இருவரின் நெஞ்சினிலே ... -- புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்

முத்துகுமரன் said...

2. அதிசய ராகம் அபூர்வ ராகம்

யோசிப்பவர் said...

1) எந்த ஊர் என்றவளே..
2) அதிசய ராகம் (அபூர்வ ராகம்)
3) இதயவீணை தூஙும்போது?!?!
5) புன்ன்னகை மன்னன், பூவிழி கண்ணன் (இரு கோடுகள்)

நீங்கள் சொன்னது போல் நான்கு பாடல்களுக்குதான் விடை எழுதியுள்ளேன்.

said...

10 antha naal njabakam nenjile vanthathe

Jayaprakash Sampath said...

6. pAlum pazhamum kaigaLil Enthi - pAlum pazhamum

7.kAtru vanthAl thalai saayum - ?

9.Dheiyvame. Dheiyvame nandri solvEn - dhieyvamagan

10.antha nAL njaapakam - uyarntha manithan

பத்மா அர்விந்த் said...

6. நான் பேச நினைப்பதெல்லாம்
10. அந்த நாள் ஞாபகம் நெஞ்சினிலே வந்ததே

enRenRum-anbudan.BALA said...

பங்கேற்ற நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!

பத்மா,
6-க்கான பதில் தவறு. பிரகாஷ் சரியாகச் சொல்லியிருக்கிறார் !!!!!

இன்னும் 8, 11 ஆகிய சரணங்களுக்கு பல்லவிகள் கண்டு பிடிக்கப் படவில்லை :-)

ச.சங்கர் said...

8.இரவினில் ஆட்டம்...பகலினில் தூக்கம்
இதுதான் எங்கள் உலகம்...எங்கள் உலகம்....நவராத்திரி

அன்புடன்...ச.சங்கர்

ச.சங்கர் said...

11.காகிதத்தில் கப்பல் கட்டி..கடல் நடுவே ஓட விட்டு

Iyappan Krishnan said...

1 . எந்த ஊர் என்றவனே இருந்த ஊரைச் சொல்லவா

2 - அதிசய ராகம்... ஆனந்த ராகம்

3 - இதய வீணணத் தூங்கும் போது

4 - மான் கண்ட சொர்கங்கள்

5 - புன்னகை மன்னன் பூவிழிக் கண்ணன்
6 - பாலும் பழமும் கைகளில் ஏந்தி

7 - காற்று வந்தால் தலை சாயும் நாணல்

8 - இரவினில் ஆட்டம் பகலில் தூக்கம் .. இது தான் எங்கள் உலகம் ..

10 - தெய்வமே .. தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே

11 - காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்..
12 - உள்ளம் என்பது ஆமை.. அதில் உண்மை என்பது ஊமை... சொல்லித்தெரிவது பாதி..
,....

தண்ணீர் தணல் போல் தெரியும்
*செந்தணலும்* நீர் போல் குளிரும்

நண்பனும் பகை போல் தெரியும்
***

சரிங்களா மொத்தமும் ?

enRenRum-anbudan.BALA said...

Jeeves,
//10 - தெய்வமே .. தெய்வமே நன்றி சொல்வேன் தெய்வமே
//

thavaRu !! All others are RIGHT :)
so, you get around 95% for your effort ;-)

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails